அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலை பயணத்தை தொடருங்கள் – கமலுக்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்…

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

கமல்ஹாசனும், அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர்.

தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், அரசியலை தூக்கி எறிந்துவிட்டு சினிமா பயணத்தை தொடருமாறு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *