முன்னாள் முதல்வர் சிறையில் இருந்து விடுதலை: காங்கிரஸ் அதிரடி கேள்வி

முன்னாள் முதல்வர் சிறையில் இருந்து விடுதலை: காங்கிரஸ் அதிரடி கேள்வி

ஜம்மு காஷ்மீரில் 14 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது

அப்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தனது டுவிட்டரில் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா எதற்காக கைது செய்யபட்டனர்? அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? ஜனநாயகம் வாழ்க! என கேள்வி எழுப்பியுள்ளார்.

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *