வீட்டுக்குள்ளும் ஆங்கராக இருக்கும் அர்ச்சனா: கமலஹாசன் கிண்டல்

வீட்டுக்குள்ளும் ஆங்கராக இருக்கும் அர்ச்சனா: கமலஹாசன் கிண்டல்
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனாவால் பிக்பாஸ் வீடு ஓரிரு நாட்கள் மட்டுமே கலகலப்பாக இருந்தது
  • அதன் பின் மற்ற போட்டியாளர்களை டாமினேட் செய்ய முயன்றார். பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் தலைவர் என்று பெயருக்கு ஆரி இருந்தாலும் அர்ச்சனா தான் கிட்டத்தட்ட மொத்த வீட்டையும் வழிநடத்தினார்
  • சுரேஷை மன்னிப்பு கேட்க வைப்பது உட்பட பல விஷயங்களில் அவர் மூக்கை நுழைத்து பிக்பாஸ் வீட்டின் கேப்டன் போல் செயல்பட்டார்
  • இதனை நேற்றைய நிகழ்ச்சியின் போது கமல் சுட்டிக் காட்டினார் நீங்கள் வெளியில் ஆங்கராக இருந்ததால் வீட்டுக்குள் வந்த பின்னரும் அதேபோல் செயல்படுகிறார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார் கமலஹாசனின் இந்த கண்டிப்பு அர்ச்சனாவின் முகத்தை சுருங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

sivalingam

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *