முதல் முறையாக அழவைத்த அறந்தாங்கி நிஷா: நெகிழ்ச்சியான எபிசோட்

முதல் முறையாக அழவைத்த அறந்தாங்கி நிஷா: நெகிழ்ச்சியான எபிசோட்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் அறந்தாங்கி நிஷா அனைவரையும் அழ வைத்துவிட்டார் இது வரை அனைவரையும் சிரிக்க வைத்த அறந்தாங்கி நிஷா முதல்முறையாக அழ வைத்தது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது

தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலம் அனுபவங்களை கூறிய அவர், தான் கருப்பு நிறம் என்பதால் எவ்வளவு தூரம் அவமானப்பட்டார் என்பதையும் அதன் பின்னர் அந்த அவமானத்தை எப்படி பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் எப்படி முன்னேறினார் என்பதையும் அவர் நெகழ்ச்சியாக கூறினார்

கருப்பு என்பது நல்லது என்று சிகப்பானவர்கள் மட்டுமே கூறுவார்கள் என்றும் கருப்பாக இருப்பவரக்ளின் வலி அவர்களுக்கு தெரியாது என்றும் அவர் கூறியபோது மற்ற போட்டியாளர்கள் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினார்

மொத்தத்தில் சாதிப்பதற்கு நிறம் தேவையில்லை முயற்சி தான் தேவை என்று அவர் கூறிய விஷயம் அனைவருக்கும் பொருந்தும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

admin

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *