மும்பையுடன் இன்று மோதல் – ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?

மும்பையுடன் இன்று மோதல் – ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?

ஐ.பி.எல். போட்டியில் 9-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. 2-வது போட்டியில் அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தியது. ஐதராபாத்தை வீழ்த்தி அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஐதராபாத் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவி இருந்தது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 10 ரன்னிலும், 2-வது போட்டியில் பெங்களூருவிடம் 6 ரன்னிலும் தோற்றது.இதனால் ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் ஐதராபாத் 8-ல், மும்பை 7-ல் வெற்றி பெற்று உள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *