பிரம்மாண்ட இயக்குனருக்கு நேரும் சோதனை: அடிமேல் அடி வாங்கும் ஷங்கர்!

பிரம்மாண்ட இயக்குனருக்கு நேரும் சோதனை: அடிமேல் அடி வாங்கும் ஷங்கர்!

இந்தியன் 2′ திரைப்படத்தின்படத்தில் நடிகர் கமல்ஹாசன் காஜல் அகர்வால், பிரியா பவானிஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு ‘இந்தியன் 2‘ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் துவங்கியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் நாடு முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காரணமாக முழுமையான ஊரடங்குஅறிவிக்கப்பட்டது.

இதனால் ஷங்கர் தற்போது தமிழில் ஹிட்டடித்த தன்னுடைய ‘அந்நியன்‘ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்.

‘இந்தியன் 2’ திரைப்படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த திரைப்படத்திலும் பணியாற்ற கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது லைக்கா நிறுவனம்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *