சமூகத்தில் இருப்பதைத்தான் சினிமா பேசுகிறது: நச் பதில் அளித்த இயக்குனர் வெற்றிமாறன்!

சமூகத்தில் இருப்பதைத்தான் சினிமா பேசுகிறது: நச் பதில் அளித்த இயக்குனர் வெற்றிமாறன்!

சினிமாவில் ஆர்வமுள்ள இளைஞர்கள் சாதிப்பதற்காக பயிற்சி முகாம் திறக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களுக்காக சினிமா பயிற்சி கொடுக்கும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

இந்த புதிய முயற்சியை சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனத்துடன் இனைந்து தொடங்கியுள்ளார். முழுக்க முழுக்க இலவசமாக பயிற்சி அளிக்கும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 100% மானியத்துடன் முழுமையான உணவு, குடியிருப்பு வசதிகள் வழங்கப்பட உள்ளது.

வெற்றி மாறனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “சமூகத்தில் இருப்பதைத்தான் சினிமா பேசுகிறது. அதைப் பேசாமல் இருப்பதால் சமூகத்தில் அது இல்லை என்று ஆகிவிடாது. பேசப்பட்டு விவாதத்தை உருவாக்கும்போது அது நல்ல விஷயம் என்றே நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், சூர்யாவின் ‘வாடிவாசல்‘ திரைப்படத்தை துவங்க இருக்கிறார்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *