இன்றைய முக்கிய நிகழ்வுகள் :-

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :-

*1916ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே இலங்கையில் உள்ள ரத்தினபுரி நகரில் பிறந்தார்.

*1899ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பூச்சியினங்கள் குறித்த பல அரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறிய சர் வின்சென்ட் விகில்ஸ்வொர்த் (Sir Vincent Wigglesworth) இங்கிலாந்தின் லங்காஷயர் கவுன்டியில் உள்ள கிர்க்ஹாம் நகரில் பிறந்தார்.

*1790ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் மறைந்தார்.

முக்கிய தினம் :-

உலக ஹீமோபிலியா தினம்
*உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக இரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது.

*இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருக்கும். இரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நினைவு நாள் :-

டாக்டர் ராதாகிருஷ்ணன்
*நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் விதத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

*1923-ல் இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.

*இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம் காந்தி. அனைவருக்கும் ஆசிரியர் போன்றவர் ராதாகிருஷ்ணன். அவரிடம் கற்க ஏராளமான விஷயங்கள் உள்ளன என்று நேரு புகழ்ந்துள்ளார்.

*நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது 1954-ல் வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் தனது 87-வது வயதில் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மறைந்தார்.

பிறந்த நாள் :-

தீரன் சின்னமலை
*இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.

*இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.

*வரி கொண்டு சென்ற ஊழியரிடம் ‘சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்’ என்று கூறினார். அப்போதிலிருந்து, ‘சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.

*இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

*இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை தனது 49வது வயதில் (1805) மறைந்தார்.

shiva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *