மேற்குதொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் -லேசான மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வடக்கு கேரளம் மற்றும் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.