தமிழ் சினிமாவில் மீண்டும் களம் இறங்குகிறார் செந்தில்

தமிழ் சினிமாவில் மீண்டும் களம் இறங்குகிறார் செந்தில்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்து மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்கள்.

இத்தனை வருடங்கள் கழித்து முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கவுள்ளார் செந்தில். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இந்த படத்தை அடுத்து இயக்குகிறார்.

மேலும் ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு இயக்குனர் சுரேஷ் பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் சமீர் பரத்ராம் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *