சிவகாசியில் -சேவல் சண்டை போட்டி: 1500 சேவல்கள் பங்கேற்பு
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசியில் மாநில சேவல் சண்டை போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியை முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இதற்காக, 100 களங்கள் அமைக்கப்பட்டு,1500க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றன.
போட்டியில் 320 சேவல்கள் வெற்றி பெற்றது . 480 சேவல்கள் பங்கேற்ற போட்டி டிராவில் முடிந்தது. வெற்றி பெற்ற சேவல்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரிசு வழங்கினார்.