இன்றைய முக்கிய நிகழ்வுகள் :-

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :-

*1868ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர்களில் முதலாம் ஆப்பிரிக்க அமெரிக்கர் டபிள்யூ.இ.பி.டுபோய்ஸ் பிறந்தார்.

*1947ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி உலக தரநிர்ணய அமைப்பு (ISO) ஆரம்பிக்கப்பட்டது.

*1855ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கணித உலகத்தில் மிக சிறந்தவர்களுள் ஒருவரான கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்தார்.

பிறந்த நாள் :-

மைக்கேல் டெல்
*கணினி விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிறந்தார்.

*இவர் தனது தந்தை வாங்கி தந்த புது ஆப்பிள் கம்யூட்டரை தனி தனியாகப் பிரித்து, பிறகு சரியாக பொருத்தி கணினி பற்றி கற்றுக்கொண்டார்.

*கணினியின் வடிவமைப்பு குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களை அறிந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையிலேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார்.

*அங்கேயே, கணினியின் உதிரிபாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்க ஆரம்பித்தார். அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, முழு மூச்சாக தொழிலில் இறங்கினார்.

*வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புக்கொண்டு தங்கள் தேவைகள், குறைகளை தெரிவிக்க தொலைபேசி, இணையம், நேரடி சந்திப்பு என பல வசதிகளை செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார்.

*பிறகு 1987ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை ‘டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன்’ என மாற்றினார். 1992ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் இதழின் ‘டாப் 500’ நிறுவனங்களின் பட்டியலில் டெல் இடம்பிடித்தது. அப்போது இவருக்கு வயது 27. அந்த பட்டியலில் மிகவும் இளமையான சிஇஓ இவர்தான்.

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *