30 வருட திருமண வாழ்க்கை: சுரேஷ் சக்கரவர்த்தி வெளியிட்ட வைரல் புகைப்படம்!

30 வருட திருமண வாழ்க்கை: சுரேஷ் சக்கரவர்த்தி வெளியிட்ட வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்பதும் அவர் டைட்டில் வின்னர் வரை வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்

ஆனால் எதிர்பாராத வகையில் திடீரென அவர் நான்காவது வாரமே வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி சற்றுமுன்னர் தனது மனைவியுடன் 30 வருடங்களுக்கு முன் திருமணத்தன்று எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

30 வருட திருமண வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் மலரும் நினைவுகளை கொண்டது என்றும் எனது மனைவிக்கு மிகவும் நன்றி என்றும் அவருக்கு எனது திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார்

சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி இணைந்து எடுத்த இந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

shiva

இதையும் கொஞ்சம் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *