உண்மையான வின்னர்கள் இந்த சிங்கப்பெண்கள் தான்; அனிதா, சனம்ஷெட்டி குறித்து ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த விதமான நடிப்பும் இன்றி தாங்களாகவே இருந்த போட்டியாளர்களில் இருவர் அனிதா மற்றும் சனம் ஷெட்டி
ஆனால் இந்த இருவரை அன்புகுரூப் சதிசெய்து வெளியேற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத் ஆகிய இருவரும் இணைந்த புகைப்படத்தை அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படத்திற்கு பல்வேறு ரசிகர்களும் கமெண்ட்டுகளை அளித்து வரும் நிலையில் உண்மையான வின்னர்கள் இவர்கள் இருவரும் தாம் என்றும் உண்மையான சிங்கர் பெண்களும் இவர்கள்தான் என்றும் உங்களுக்கு என்ன இயல்புகள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி ஆக இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த அன்பை பெற்றவர்கள் அனிதா மற்றும் சனம் என்பது குறிப்பிடத்தக்கது